கனடாவில் நண்பர்கள் இருவரை பலிவாங்கிய தீ விபத்து: வெளியான புகைப்படம்
கனடாவின் நோவா ஸ்கோடியாவில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளம் பெண்கள் இருவர் பலியானதுடன் இன்னொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
புரூக்ஸைட் தெருவில் அமைந்துள்ள குடியிருப்புக்கு நள்ளிரவு 2 மணிக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருவர் தீ விபத்தில் சிக்கி பலியானது உறுதி செய்யப்பட்டது.
இன்னொருவர் ஆபத்தான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மரணமடைந்த இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனவும், ஒருவர் 16 வயதான Madison Kelly எனவும் இன்னொருவர் 15 வயதேயான Brea McKenzie எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரு இளம் பெண்கள் தொடர்பில் அஞ்சலி கூட்டம் முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த இரண்டுமாடி குடியிருப்புக்கு வெளியே குவிந்த நூறுக்கும் மேற்பட்ட மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தீ விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Brea McKenzie-ன் தாயார் தற்போது தீ விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளார்.
அவரது சிகிச்சை செலவுகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.