டொரொண்டோ போராட்டத்தில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய 10 பேர் கைது
டொரொண்டோவில் இடம்பெற்ற குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்புக் குழுவினருடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து 10 பேர் கைது செய்யப்பட்டதாக டொரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவரும் வேறும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், ஏனையவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை பொலிஸார் வெளிப்படுத்தவில்லை.
குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது எனவும் பெருமளவு நாடுகடத்தலைத் தொடங்குங்கள் எனவும் போராட்டக்காரர்க்ள கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு எதிராக நூற்றுக்கணக்கான குடியேற்ற ஆதரவாளர்கள் அங்கு கூடி, “நீங்கள் விரும்பியது நடைபெறாது, குடியேற்றவர்கள் இங்கே தங்குவார்கள்” என எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கைது விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு மூலம் வெளியிடப்படும் என டொரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.