பயங்கரமாக வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர் லாரிகள்! ஈரான்-ஆப்கான் எல்லையில் பரபரப்பு
ஈரான்-ஆப்கான் எல்லையில் எரிவுாயு மற்றும் எண்ணெய் டேங்கர் லாரிகள் பயங்கரமாக வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹீரட் மாகாணத்தின் இஸ்லாம் குல்லா நகரில் உள்ள சுங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து எரிவாயு டேங்கர் லாரிகள் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும், அதைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் உதவி கேட்டுள்ளதாக ஹீரட் மாகாண கவர்னர் கூறி உள்ளார்.
விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெடி விபத்து வீடியோக்கள் பல பகிரப்பட்டுள்ளன. இதில் ஒன்றில், சற்று தொலைவில் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறுவதை கண்ட மக்கள் தெறித்து ஓடுவது வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 10 காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
அதிக அளவு பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.