ஈரானின் புதிய அறிவிப்பால் எகிறும் பதற்றம் ; மத்திய கிழக்கில் குறிவைக்கப்பட்ட முக்கிய இடங்கள்
வளைகுடா நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு வங்கி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் படைகளின் இந்த அறிவிப்பால், பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய், சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.