கொரிய எல்லைப் பகுதியில் பதற்றம் ; கிம் ஜாங் உன் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அண்டை நாடான தென் கொரியாவுடன் எல்லைப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ட்ரோன் தொழில்நுட்பத்தை விரைவாக விரிவுபடுத்தவும், புதிய நவீன ஆயுதங்களை முழுவீச்சில் உருவாக்கவும் வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளாா்.
மரபுசாா், அணு ஆயுத பலத்தை வலுப்படுத்துவதோடு, நவீன ட்ரோன் தொழில்நுட்பங்களை முன்னெடுப்பதிலும் வட கொரியா முழு கவனம் செலுத்தி வருகிறது.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட படைகள் மூலம் வட கொரியாவுக்கு நவீன ட்ரோன் போா்வியூகங்கள் குறித்த அனுபவம் கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது.
இதையொட்டி, அதிநவீன தாக்குதல் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி உபகரணங்களின் கண்காட்சியை அதிபா் கிம் ஜோங் உன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
அப்போது, ட்ரோன் தொழில்நுட்பத் துறையில் நாடு மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய உரையாற்றிய அவா், இத்துறையை விரைவாக விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்தாா்.