பிரேசில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவு! 122 ஆண்டுகள் பழமையான பங்களா தரைமட்டம்
பிரேசில் நாட்டில் ஏற்பட்ட நேற்று காலை திடீரென பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு நகரமான ஓரோ பெட்ரோ என்ற இடத்தில் உள்ள மலையிலே நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
,
குறித்த நிலச்சரிவில் 122 ஆண்டுகள் பழமையான மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த பிரேசிலியா பங்களா தரைமட்டமாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த பிரேசியா பங்களா யுனெஸ்கோ சார்பில் ஓரே பெட்ரோ நகரம் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் தரைமட்டமான கட்டடம் கடந்த 1890ம் ஆண்டு கட்டப்பட்டது.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஒருவர் கொல்லப்பட்ட Ouro Preto நகரம் உட்பட, அந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலப்பகுதி முழுமையாக தண்ணீரை உறிஞ்சி மிருதுவாகியிருந்ததால், இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.