பிரான்ஸில் பயங்கரம்; ஒரே இரவில் பதின்ம வயது பெண் உட்பட மூவரை கொலை செய்த இளைஞன்
பிரான்ஸில் ஒரே இரவில் பெண்கள் உட்பட மூவரை இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிரான்ஸின் Maine-et-Loire மாவட்டத்திற்குட்பட்ட ஒன்யேர் (Angers)பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதேசமயம் சந்தேக நபர் கொலைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரெவும் கூறப்படுகின்றது.
அத்துடன் சந்தேக நபர்கள் அதிக குடிபழக்கம் காரணமாக கொலைகள் தொடர்பாக பல தகவல்களை வெளியிடயில்லை அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சம்பவ தினத்தன்று இரவு பதின்ம வயது பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் இருந்த நிலையில், அவர்கள் மூவரை அந்த நபர் கத்தியால் குத்தியுள்ளார். மிகவும் கோபத்துடன் மூவரையும் அந்த நபர் கத்தியால் குத்திய நிலையில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 16,18 மற்றும் 20 வயதுடையவர்களாகும். அதேவேளை கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரை அந்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இசை நிகழ்ச்சி சத்தம் கேட்டே குறித்த நபர் அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.
இரண்டு பெண்களிடம் தகாத சீண்டலில் ஈடுபட்ட போது அவர்கள் கத்தி கூச்சலிட்டமையால் கோபமடைந்த நபர் அவர்களை கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் , சந்தேகநபர் மனநல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளாரா என ஆராயப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சந்தேக நபர் வெளிநாடு ஒன்றில் இருந்து பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரி வந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.