முன்னாள் ஊழியருக்கு 1000 கோடி இழப்பீடு வழங்கும் டெஸ்லா...எதற்காக தெரியுமா?
டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் தொடர்ந்த வழக்கால் ஆயிரம் கோடி ரூபாய் டெஸ்லா நிறுவனம் இழப்பீடு வழங்க அமெரிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா டெஸ்லா ஆலையில் பணிபுரிந்தவர் தான் ஓவன் டியாஸ் என்ற கருப்பினத்தவர். அந்த சமயத்தில் இவர் லிப்ட் இயக்குபவராக பணியாற்றி வந்துள்ளார்.
அந்த வேளையில் சக பணியாளர்கள் இவரிடம் இனப்பாகுபாடு காட்டியதாகவும் தகாத வார்த்தைகளை கூறி இவரை துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இது குறித்து ஓவன் டெஸ்லா நிறுவனத்திடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.
இதன் காரணமாக ஓவன் டியாஸுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாயை இழப்பீடு வழங்க டெஸ்லா நிறுவனத்துக்கு அமெரிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.