மொத்தமாக 80,000 கார்களை திரும்பப்பெற்ற எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்
சீனாவில் தயாரிக்கப்பட்ட 80,000 கார்களை எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் திரும்பப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013ம் ஆண்டு தொடக்கத்தில் தயாரித்து வெளியிட்ட கார்களையும் டெஸ்லா நிறுவனம் சீனாவில் திரும்பப்பெறுகிறது. குறித்த கார்களில் மென்பொருள் மற்றும் சீட் பெல்ட் சிக்கல்கள் இருப்பதாக டெஸ்லா நிறுவனம் கண்டறிந்த பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான டெஸ்லா 2013 முதல் 2020 வரையில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்த S மற்றும் X வகை கார்களில் 67,698 எண்ணிக்கையை திரும்பப்பெற்றுள்ளது.
குறித்த கார்களில் புதிய மென்பொருள்களை மேம்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி மற்றும் நவம்பர் 2019 வரையில் ஏற்றுமதி செய்த 2,736 மாடல் 3 வகை டெஸ்லா கார்களையும் திரும்பப்பெற்றுள்ளது.
ஏப்ரல் மாதம் முக்கிய கோளாறு காரணமாக டெஸ்லா கார்கள் விபத்தில் சிக்குவதாக கூறி, சீனாவில் இருந்து மொத்தமாக 127,785 கார்களை திரும்பப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.