முதலீட்டாளர்கள் அதிருப்தி ; டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய CEO?
மின்சார வாகன தயாரிப்பாளரின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அரசியல் விவகாரங்களில் அதிகரித்து வரும் ஈடுபாட்டால் முதலீட்டாளர்கள் புதிய CEO-வை தேர்ந்தெடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
71 சதவீதம் சரிவு
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார். இதனால் ட்ரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார்.
இதன்பின், ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விரைவில் விலக உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். இதனிடையே, எலான் மஸ்க் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் அரசியல் ஈடுபாடு மற்றும் வருவாயில் 71 சதவீதம் சரிவு காரணமாக டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமைத்துவ மாற்றத்தை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன தயாரிப்பாளரின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அரசியல் விவகாரங்களில் அதிகரித்து வரும் ஈடுபாட்டால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய CEO-வை தேர்ந்தெடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.