ஆயிரக்கணக்கான சைபர் டிரக் கார்களை திரும்ப பெறும் டெஸ்லா நிறுவனம்
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான சைபர் டிரக் கார்களைஎலோன் மஸ்க் இன் டெஸ்லா நிறுவனத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த மொடல் கார்கள் எட்டாவது தடவையாக திரும்ப பெறப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கப்பட்ட 46,000 க்கும் மேற்பட்ட டிரக் கார்களில் பிரச்சினை எற்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட அனைத்து சைபர் டிரக்குகளுக்கும் சமம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டெஸ்லா விசாரணை
கருத்துக்கான கோரிக்கைக்கு பதிலளிக்காத டெஸ்லா, நிறுவனம் மற்றும் அதன் தலைவர் எலோன் மஸ்க் மீதான பின்னடைவுக்கு மத்தியில் விற்பனை வீழ்ச்சியுடன் போராடி வரும் நிலையில் இது வந்துள்ளது.
டெஸ்லா கார்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கு தீ வைத்ததற்காக, "உள்நாட்டு பயங்கரவாதம்" பெயர் குறிப்பிடப்படாத மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என அமெரிக்க சட்டமா அதிபர் ஜெனரல் பாம் போண்டி தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் சைபர்ட்ரக்கின் விற்பனை விபரங்களை வெளியிடுவதில்லை, ஆனால் கார் தொழில்நுட்ப நிறுவனமான காக்ஸ் ஆட்டோமோட்டிவ் கடந்த ஆண்டு அமெரிக்காவில் சுமார் 39,000 விற்பனை செய்யப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.
விண்ட்ஷீல்ட் வைப்பர்கள் செயலிழப்பு, முடுக்கி பெடல்கள் சிக்கிக்கொள்ளல், சக்கரங்களுக்கு இயக்க சக்தி இழப்பு போன்ற பிரச்சினைகளால் முன்னர் சைபர்ட்ரக் திரும்பப் பெற்றப்பட்டன.
ஜனவரியில் சைபர் டிரக் காரில் கேன்ட் ரயில் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் ஏற்பட்ட சிக்கல் குறித்து தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்திடம் (NHTSA) தாக்கல் செய்த ஆவணங்கள் தொடர்பில் டெஸ்லா விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.