கம்போடியா மீது தாய்லாந்து ட்ரோன் தாக்குதல்
தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.
தாய்லாந்து -கம்போடியா எல்லைக்கோட்டில் அமைந்த ப்ரசத் டா மியூன் தோம் கோவில் மீது பரஸ்பர உரிமை கோரி வருகின்றன. இதற்கிடையே, சமீபத்தில் கம்போடிய பீரங்கித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன்மேலும் இருவர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து தாய்லாந்து அரசாங்கம் கம்போடியாவின் தூதரை வெளியேற்றியதுடன், தன் நாட்டுத் தூதரையும் அழைத்துக் கொண்டது. இதற்கிடையே, கம்போடியப் படைகள் முதலில் ஒரு ட்ரோனை அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் குற்றம்சாட்டியதுடன், தொடர்ந்து கம்போடிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், "திட்டமிட்டபடி இராணுவ இலக்குகளுக்கு எதிராக நாங்கள் வான்வழி சக்தியைப் பயன்படுத்தியுள்ளோம்" என தாய்லாந்து இராணுவ துணை செய்தித் தொடர்பாளர் ரிச்சா சுக்சுவானோன் தெரிவித்துள்ளார்.