தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா தீடிரென பதவிலிருந்து இடைநீக்கம்!

Prayuth Chan-Ocha Thailand
By Shankar Aug 24, 2022 09:19 PM GMT
Report

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை (Prayuth Chan-Ocha) அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

தாய்லாந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமரின் பதவிக்கால வரம்பை மீறியதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்றைய தினம் (24-08-2022) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா தீடிரென பதவிலிருந்து இடைநீக்கம்! | Thailand S Prime Minister Prayuth Chan Suspended

கடந்த 2014 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்த்து பிரயுத் ஆட்சியைப் பிடித்தார். அதன்பின்னர் 2019ல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.

பிரதமர் பதவி வகிப்பதற்கான வரம்பு 8 ஆண்டுகள் ஆகும். அந்த சட்டத்தை பிரயுத் மீறியிருப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதாவது, ஆகஸ்ட் 24, 2014 அன்று அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமராக பதவியேற்றதில் இருந்து நேற்றுடன் 8 ஆண்டு முடிந்துவிட்ட நிலையில், அவர் சட்டத்தை மீறியிருப்பதாக கூறுகின்றனர்.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா தீடிரென பதவிலிருந்து இடைநீக்கம்! | Thailand S Prime Minister Prayuth Chan Suspended

ஆனால், 2017-ல் கால வரம்பு விதியைக் கொண்ட தற்போதைய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, பதவிக் காலம் கணக்கிடப்பட வேண்டும் என்று பிரயுத் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

பதவிக்கால வரம்பை மீறியதாக தாக்கல் செய்யப்படடுள்ள மனுவை பரிசீலனைக்கு ஏற்ற நீதிமன்றம், பிரயுத்தை சஸ்பெண்ட் செய்தது.

மேலும், புகாரின் நகலைப் பெற்ற 15 நாட்களுக்குள் பிரயுத் தனது வாதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா தீடிரென பதவிலிருந்து இடைநீக்கம்! | Thailand S Prime Minister Prayuth Chan Suspended

ஆனால் எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என கூறவில்லை. பதவிக்கால வரம்பு தொடர்பாக சட்டப்பூர்வ மறு ஆய்வு முடிவு வெளியாகும் வரை பிரயுத் பிரதமர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதுவரை பிரயுத்தின் நெருங்கிய அரசியல் கூட்டாளியும், ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய அதே ராணுவக் குழுவில் இடம்பெற்றவருமான துணைப் பிரதமர் பிரவித் வாங்சுவான் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

அரசியலமைப்பு நீதிமன்றமானது, அரசியல் வழக்குகளில் பொதுவாக அரசாங்கத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளதால், இந்த வழக்கிலும் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி நீக்கம் செய்வது சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US