நீரை சிக்கனமாக பயன்படுத்திய மக்களுக்கு நன்றி பாராட்டிய கனடிய மேயர்
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கல்கரி நகரில் நீரை சிக்கனமாக பயன்படுத்திய மக்களுக்கு நகர மேயர் கொன்டெக் நன்றி பாராட்டியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று கூடுதல் அளவில் நீரை பயன்படுத்திய காரணமாக அவர் மக்களை விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நீர் பயன்பாடு குறைவாக காணப்பட்டது.
வழமையாக நகர மக்கள் நுகரும் நீரின் அளவை விடவும் வெள்ளிக்கிழமை 23 வீத அளவில் நீர் பயன்பாடு குறைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு நீரை குறைந்த அளவில் அல்லது சிக்கனமாக பயன்படுத்தியமைக்கு நகர மேயர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
கல்கரி நகரில் கடந்த சில நாட்களாக நீர் குழாய் பழுது காரணமாக நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய நகர மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தியுள்ளனர்.
நீர் குழாய் பழுது பார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நீர் பயன்பாடு வழமைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.