பிரான்ஸில் குப்பைகளை கொட்டிய நபருக்கு மேயரின் அதிரடி செயல்!
பிரான்ஸில் முறையற்ற வகையில் குப்பைகளை கொட்டிய நபருக்கு எதிராக மேயர் மேற்கொண்ட நடவடிக்கை பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
லுஆரே மாவட்டத்திலுள்ள பகுதியொன்றில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவரின் வீட்டுக்கு 12 குப்பை பைகளையும் மேயர் அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டிற்கே 12 குப்பை பைகளை மேயர் ஒருவர் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லுஆரே (Loiret) மாவட்டத்திற்குட்ட பகுதியில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
சட்டவிரோதமாக காட்டில் குப்பை கொட்டியமையினால் மேயர் கடும் கோபமடைந்துள்ளார். குறித்த 12 பை குப்பைகளையும் குறித்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்டவிரோதமாக வீசப்படும் இவ்வாறான குப்பைகள் மக்களுக்கு தொடர்ந்து தொல்லையாகவே உள்ளதென முறைப்பாடு செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் இந்த 12 குப்பை பைகளை உரிமையாளருக்கு அனுப்பி வைத்த மேயர் 135 யூரோ அபராதம் விதிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குப்பையை காட்டில் தூக்கி வீசும் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ள நிலையில் அதனையும் மேயர் பார்வையிட்டுள்ளார். அத்துடன் அந்த காணொளி ஆயிரத்திற்கும் அதிக முறை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.