குழந்தையை முதன்முறையாக உலகிற்கு அறிமுகம் செய்த நடிகை! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் முன்னனி நடிகர்களுடன் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை ஸ்ரேயா சரண் (Shriya Saran).
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி கோஷீவ்வை(Andrei Koscheev) திருமணம் செய்துகொண்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது புகைப்படங்களை, அல்லது அவருடைய போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களுக்கு தேவதை பிறந்திருக்கிறாள் என பதிவிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு உலகமே கொரோனா சூழலில் வாடிக்கொண்டிருக்கும்போது நான் கர்ப்பிணியானேன். எங்களுக்கு தேவதை பிறந்திருக்கிறாள். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டோம்” என்று கணவர் மற்றும் மகளைக் கொஞ்சும் காணொளியை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.