2 ஆம் உலகப்போரின் பின் பிரான்ஸில் சரிந்த குழந்தை பிறப்புவீதம்!
பிரான்சில் கடந்த 2023 ஆம் ஆண்டு 677,800 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரான்சில் வருடம் ஒன்றில் பிறந்த மிகக்குறைவான எண்ணிக்கை இதுவாகும்.
1945 ஆம் ஆண்டு பிரான்சில் 645,900 குழந்தைகள் பிறந்திருந்தன.
குழந்தை பிறப்பு வீழ்ச்சி
அதன் பின்னர் அதிகரித்துச் சென்ற குழந்தை பிறப்பு சமீப வருடங்களில் மீண்டும் வீழ்ச்சியடைந்த தொடங்கியுள்ளதாக l'Institut national de la statistique et des études économiques (Insee) நிறுவனம் அறிவித்துள்ளது.
677,800 குழந்தைகள் 2023 ஆம் ஆண்டில் பிறந்துள்ளன. 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 6.6% சதவீதம் (48,200 குழந்தைகள்) குறைவாகும். இடையில், 1983 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளிலும் குழந்தை பிறப்பு வீழ்ச்சியடைந்திருந்தது.
மிக மோசமான பொருளாதார நிலமை காரணமாக இந்த குழந்தை பிறப்பு வீழ்ச்சி பதிவானது. அந்த எண்ணிக்கையை விட 2023 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு குறைவாகும்.
அதேவேளை, கடந்த 13 வருடங்களில் பிரான்சில் குழந்தை பிறப்பு வீதம் 20% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.