பிரான்ஸில் உணவுப்பொருளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
பிரான்ஸின் பிரதான உணவு பொருட்களின் ஒன்றான பாணின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புதிய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் உயர்ந்து வரும் மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்தி ஆகியவை பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பாண் உள்ளிட்ட பொருட்களின் விலையை அதிகரிப்பதாக பேக்கரி மற்றும் பேஸ்ட்ரியின் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதத்தில் பிரான்ஸில் பாண் ஒன்றின் விற்பனை விலை சராசரியாக 93 சதவிதமாக காணப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரான்ஸில் தற்போது அதிகம் பெறுமதியான உணவு பொருட்களில் ஒன்றாக பாண் மாறி வருவதாக இன்சி தெரிவித்துள்ளது.
கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது தற்போது பாணினின் விலை 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் பிரான்ஸில் உயர்ந்து வரும் ஏனையவற்றுடன் ஒப்பிடும் போது பேக்கரி உற்பத்திகள் ஓரளவில் கட்டுப்பாட்டிலேயே உள்ளதென பேக்கரி-பேஸ்ட்ரியின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டுமானால் 30 சதவீதம் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை, எரிசக்தி, மூலப்பொருட்கள், பொதியிடல் உள்ளிட்ட அனைத்து வகையான கட்டணங்களும் அதிகரித்துள்ளதனை கருத்திற்கு கொண்டு விலைகளில் மாற்றம் மேற்கொளள்ப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.