பிரான்ஸின் அகதிகள் முகாமில் ஏற்பட்ட பரபரப்பு!
பிரான்ஸின் அகதிகள் முகாம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Fresnes (Val-de-Marne) நகரில் உள்ள allée des Platanes பகுதிக்கு அருகே அமைந்துள்ள குறித்த அகதிகள் முகாமில் செவ்வாய்க்கிழமை - புதன்கிழமைக்கு உட்பட்ட நள்ளிரவில் இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு படையினர் மிக துரிதமாக செயற்பட்டு அகதிகளை அங்கிருந்து வெளியேற்றினர். மொத்தமாக 150 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இச் சம்பவ இடத்தில் மொத்தமாக 100 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.