விமான பயணத்தில் இந்திய வம்சாவளி நபரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!
அமெரிக்காவில் சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தல் செய்த இந்திய வம்சாவளி நபருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 41 வயதான நீராஜ் சோப்ரா என்பவர், 2019ம் ஆண்டு விமானத்தில் பயணம் செய்த போது, தன் அருகே அமர்ந்திருந்த சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.
சோப்ரா விமானத்தில் பயணம் செய்த போது, விமானத்தில் கொடுக்கப்பட்ட போர்வையை தன் உடம்பை சுற்றி மூடியதுடன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவனை தகாத முறையில் சீண்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன், அவரை கடுமையாக எச்சரித்துள்ளான். எனினும் அவர் தனது சீண்டல்களை நிறுத்தவில்லை.இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதில் குற்றம் உறுதிபடுத்தப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த கோர்ட் 16 வயது மைனர் சிறுவனை தகாத முறையில் சீண்டல் செய்ததற்காக அவருக்கு 15 மாதங்கள் சிறைதண்டனை வழங்கியது.