பிரான்ஸில் சிறுவர்களை சீண்டிய ஆசிரியர் ஒருவருக்கு நேர்ந்த கதி!
பிரான்ஸில் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். Yvelines நகரில் வசிக்கும் குறித்த ஆசிரியர், தன்னிடம் பியானோ இசைக்கருவி பயில வரும் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான ஆண்டுகளில் பல்வேறு மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.
அதன்படி குறித்த ஆசிரியர் 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதாக கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
தீவிர விசாரணைகளிலேயே அவர் பல்வேறு மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.