உக்ரைனில் அதிகரிக்கும் போர் பதற்றம்; தவிக்கும் தமிழக மாணவர்கள்
உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்துள்ள நிலையில் உலக நாட்டுகள் பதற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் உக்ரைனிய அதிபர் பொருமக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அச்சப்படத்தேவையில்லை எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த உக்ரைனில் பல நாட்டு மாணவர்களும் கல்விகற்றுவரும் நிலையில் , இந்த போர்சூழலில் அவர்கள் பல்வேறு இன்னகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் உக்ரைனிலுள்ள தமிழக மாணவர்கள் போக்குவரத்து வசதியின்றி தவிப்பதாக தெரியவந்துள்ளது.
அனைத்து வகை போக்குவரத்துகளும் முடக்கம் செத்ததால் தமிழக மாணவர்கள் மிகவும் அவதி படுகிறார்கள்.
இந்நிலையில் அங்கு ஏற்படுகின்ற போர் விமானங்கலின் சப்தம் காதை பிளக்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தவித்துவருகிறார்கள்.
இதன்படி இந்திய தூதரகம் போருக்கு பின்னரே விமான சேவை தொடரும் என அறிவித்துள்ளது.
போலந்து எல்லையை ஒட்டியுள்ள நகரம் மட்டுமே தற்போதைய நிலையில் பாதுகாப்பான நகரமாக உள்ளது.
மேலும் அங்கு சாப்பாடு, தண்ணீர் என அனைத்தையும் பல மடங்கு விலை கொடுத்து வங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.