புளோரிடாவில் ஆற்றில் கைவிட்டவருக்கு நேர்ந்த கதி!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், படகிலிருந்த மீனவரை சுறா மீன் ஒன்று கவ்வி தண்ணீருக்குள் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எவர்கிளேட்ஸ் தேசிய பூங்கா வழியாகப் பாயும் மிசிசிபி ஆற்றில் முதலைகள், தண்ணீர் பாம்புகள் மட்டுமின்றி உப்புத் தண்ணீரிலும், நன்னீரிலும் வாழக்கூடிய புல் சுறாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில் மீனவர் ஒருவர் படகிலிருந்தபடி தூண்டில் வீசிவிட்டு கை கழுவ முயன்றபோது, புல் சுறா ஒன்று பாய்ந்து வந்து அவரது கையை கவ்வி அவரை ஆற்றுக்குள் இழுத்தது.
இதனையடுத்து உடனடியாக சுதாரித்த சக மீனவர்கள் அவரை ஆற்றிலிருந்து மீட்டு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.