கனடாவில் இந்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி ; வீட்டிற்குள் புகுந்து அரங்கேற்றப்பட்ட சம்பவம்
கனடா நாட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி இளைஞர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் அபோட்ஸ்ஃபோர்ட் நகரத்தில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

போதைப் பொருள்
இந்த நிலையில், கடந்த ஜன.9 ஆம் திகதி குறித்த இளைஞனை அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த இளைஞனை மீட்டு பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கொலை வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் கனடாவின் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, பிரபல குற்றவாளிக் குழுவின் தலைவரான ஒருவர் கொலைக்குப் பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கொலை செய்யப்பட்ட பஞ்சாபி இளைஞரின் குடும்பத்தினர் கடந்த 1995 ஆம் ஆண்டு கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இத்துடன், குறித்த இளைஞன் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.