டுவிட்டர் புதிய உரிமையாளராக எலான் மஸ்க் பதிவிட்ட முதல் டுவீட்!
உலகின் பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிற்றர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க முன் வந்தார்.
இதனையடுத்து, டுவிற்றரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் நிறுவனம் சம்மதித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை, இந்த ஒப்பந்தம் இறுதியானது.
ஏற்கனவே டுவிற்றரின் 9% பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தனது முதல் டுவீட்டை அவர் பதிவிட்டுள்ளார்.
??♥️ Yesss!!! ♥️?? pic.twitter.com/0T9HzUHuh6
— Elon Musk (@elonmusk) April 25, 2022
அவர் தெரிவித்துள்ளதாவது,
“எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிற்றரில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் பதிவிட்ட மற்றொரு டுவிற்றர் பதிவில், “சுதந்திரமான பேச்சு என்பது ‘செயல்பாட்டில் இருக்கும் ஜனநாயகத்தின் அடித்தளம்’ ஆகும்.
I hope that even my worst critics remain on Twitter, because that is what free speech means
— Elon Musk (@elonmusk) April 25, 2022
மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான முக்கியமான விஷயங்கள் டுவிற்றரில் விவாதிக்கப்படுகின்றன.
புதிய அம்சங்களுடன் டுவிட்டரை மேம்படுத்துவதன் மூலம், டுவிற்றரை முன்னெப்போதும் விட, சிறந்ததாக ஆக்க விரும்புகிறேன்.
டுவிற்றரில் வைரஸ் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலமும், எல்லா மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும், டுவிட்டரை சிறந்ததாக்க விரும்புகிறேன்.
டுவிற்றரில் ‘மிகப்பெரிய ஆற்றல்’ உள்ளது. அதனை வெளிக்கொண்டு வர, இந்த நிறுவனத்துடனும் அதன் பயனர்களின் சமூகத்துடனும் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.