ஐந்து வயதில் ஆண் குழந்தையைப் பெற்ற சிறுமி!

Child Abuse
By Sulokshi May 14, 2022 09:37 AM GMT
Sulokshi

Sulokshi

Report

உலகிலேயே இளம் வயதில் குழந்தைப் பெற்ற சிறுமி பற்றிய தகவல் இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

1939 ஆம் ஆண்டு பெரு என்கிற கிராமத்தில் திபுரெலோ மற்றும் விக்டோரியா லோசியா என்ற பெற்றோர் தங்கள் 5 வயது மகளின் வயிறு தொடர்ந்து விரிவடைவதை கவனித்துள்ளனர்.

ஐந்து வயதில் ஆண் குழந்தையைப் பெற்ற சிறுமி! | The Girl Who Gave Birth To A Boy At The Age Five

அச்சிறுமியை மருத்துவரிடம் அழைத்து செல்ல முடிவெடுத்த நிலையில் இந்த தொடர்ச்சியான வீக்கம் வயிற்று கட்டியின் ஏதோ அறிகுறி என்று எண்ணியுள்ளனர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் லீனா மதீனா(Lena Medina) என்ற 5 வயது சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிய வந்தது.

இதனைக் கேட்டு திபுரெலோ மற்றும் விக்டோரியா லோசியா கடும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து 1939 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி மதீனாவிற்கு(Lena Medina) ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆபரேஷன் மூலம் பிறந்த அக்குழந்தை 2.7 கிலோவில் மிக ஆரோக்கியமாக இருந்துள்ளது. தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயரான ஜெரார்டோ என்ற பெயரையே மதீனா(Lena Medina) தனது மகனுக்கு சூட்டினார்.

ஐந்து வயதில் ஆண் குழந்தையைப் பெற்ற சிறுமி! | The Girl Who Gave Birth To A Boy At The Age Five

உலகின் இளைய வயதில் கர்ப்பமாகி தாயான லீனாவின் வாழ்க்கையில் குழந்தையின் தந்தை யார், அவர் எவ்வாறு கர்ப்பமானார் என்ற கேள்விகள் தொடர்ந்து அவரது மரணம் வரை பின் தொடர்ந்தது.

இதற்கு முன்கூட்டிய பருவமடைதல் என்பது ஒரு அரிய மரபணு நிலை என காரணம் கூறப்பட்டாலும், இப்பிரச்சனை குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிறு வயதிலேயே தகாத தொடர்பு ஏற்பட்டதன் காரணமாக லீனா முன்கூட்டியே பருவமடைந்திருக்கலாம் என அதிர்ச்சி காரணமும் சொல்லப்படுகிறது.

ஐந்து வயதில் ஆண் குழந்தையைப் பெற்ற சிறுமி! | The Girl Who Gave Birth To A Boy At The Age Five

மேலும் 5 வயதான மதீனாவை(Lena Medina) பரிசோதித்ததில் அவருக்கு மார்பகங்கள் மற்றும் இடுப்பு சாதாரண அளவைவிட சற்று அகலமாக இருந்ததாகவும், பருவத்திற்குப் பிந்தைய எலும்பு வளர்ச்சி அடைந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருபுறம் அவளை சிறு வயதில் யாரோ தகாத முறையில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு இந்த சம்பவத்தில் மதீனாவின் தந்தை திபுரெலோ முதலில் சந்தேகிக்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக எந்த ஒரு சாட்சியும் கிடைக்காததால் விடுவிக்கப்பட்டார்.

சொந்த மகளோடு எந்த வகையான உடல் ரீதியான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்று திபுரெலோ கடுமையாக மறுத்தார். பின் ஒரு நேர்காணலில் லீனாவின் மகன் ஜெரார்டோவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் அவர் தன் தாயுடனான இளம் வயது கர்ப்பம் குறித்துப் பேச மறுத்துவிட்டார்.

லீனா 1970களின் முற்பகுதியில் ரவுல் ஜுராடோ என்ற நபரை திருமணம் செய்து அவர் தனது 39 வது வயதில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US