40 கோடி பேரின் டுவிட்டர் தகவல்கள் திருடிய ஹேக்கர்; டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட பரபரப்பு!

Twitter Hackers Elon Musk Salman Khan Sundar Pichai
By Sundaresan Dec 27, 2022 10:33 AM GMT
Report

கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான், நாசா, இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை உள்ளிட்ட 40 கோடி டுவிட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளதாக ஹேக்கர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல், டிஜிட்டல் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பெரும் செல்வந்தரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும். ஊழியர்களை நீக்கியது, பிரபலங்களின் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் என்று அவரது பல முடிவுகள் விமர்சனத்தையே சந்தித்து வருகிறது. இதனால் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தற்போது புதிய பிரச்சனை ஒன்று உருவெடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு ட்விட்டரில் இருந்து 54 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், தற்போது கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகன் ஜீனியர் டொனால்ட் ட்ரம்ப், நாசா, இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, உலக சுகாதார நிறுவனத்தின சமூகவலைத்தளம் உள்ளிட்ட 40 கோடி டுவிட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், அதாவது டுவிட்டர் கணக்கு வைத்திருப்போரின் இ-மெயில், பெயர், பயனர் பெயர், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, கணக்கு உருவாக்கிய திகதி, பயனர்களின் செல்ஃபோன் எண் ஆகியவை டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளதாக ஹேக்கர், 1000 பயனர்களின் தரவுகளை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 கோடி பேரின் டுவிட்டர் தகவல்கள் திருடிய ஹேக்கர்; டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட பரபரப்பு! | The Hacker Who Stole 40 Crore People S Twitter

இதனை இஸ்ரேல் நாட்டு சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கேலினும் உறுதிப்படுத்தியுள்ளார். ஏபிஐ குறைபாடு காரணமாக பயனர்களின் தரவுகளை ஹேக்கர்கள் சேகரித்திருக்கலாம் என ஹட்சன் ராக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஹட்சன் ரொக், டார்க் வெப்பில் உள்ள ஹேக்கரின் பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளது. அதில், “டுவிட்டர் அல்லது எலான் மஸ்க், நீங்கள் இதனைப் படித்துக்கொண்டிருக்கும்போது, 54 லட்சம் தகவல் திருட்டில் ஏற்கனவே உங்களுக்கு (எலான் மஸ்க்) அபராதம் விதிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், 40 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டிற்கான அபராதத்தை சேர்த்து எண்ணிப் பாருங்கள். ஃபேஸ்புக்கில் 53 கோடி பேரின் தகவல் திருடுப் போனதற்காக மெட்டா நிறுவனம் பல ஆயிரம் கோடி அபராதம் செலுத்தி இருக்கிறது. அதுபோன்று நடக்காமல் இருக்க இடைத்தரகர் மூலம் இந்தத் தரவை பிரத்தியேகமாக வாங்குவதே நல்லது.

இடைத்தரகர் மூலம் தன்னை அணுகினால் தன்னிடம் உள்ள பயனர் தரவுகள் சைபர் குற்றவாளிகளிடம் செல்லாமல் தவிர்க்கலாம். இல்லையெனில், உங்கள் நிறுவனம் மீதான நம்பகத்தன்மையை அடியோடு அழித்து விடும். இதனால் இடைத்தரகர் மூலம் ஒப்பந்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று ஹேக்கர் பேரம் பேச அழைப்பு விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US