பிரான்ஸில் ஓடும் ரயிலிலுருந்து மனைவியை தள்ளிவிட்ட கொடூர கணவன்!
பிரான்ஸில் ஓடும் ரயிலில் மனைவிக்கு கணவன் செய்த அதிர்ச்சி செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, தனது மனைவியை ஓடும் ரயிலில் இருந்து நபர் ஒருவர் தள்ளி விட்டதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை Val-de-Marne மாவட்டத்தில் உள்ள Créteil-Pompadour தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
காலை 6.40 மணி அளவில் குறித்த நிலையத்தில் இருந்து RER D தொடருந்து பயணிக்க தயாரானபோது, நபர் ஒருவர் தனது மனைவியை தொடருந்தில் இருந்து தள்ளி விட்டுள்ளார்.
இந்நிலையில் தண்டவாளத்தில் விழுந்த மனைவியின் கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்பு படையினர் குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.