பிரித்தானியாவில் மிகவும் குறைவான உயிரிழப்புகள் பதிவு!
பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் Covid-19 தொற்றினால், 40ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டதோடு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 81இலட்சத்து 93ஆயிரத்து 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 37ஆயிரத்து 763 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 69ஆயிரத்து 311 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 780 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35ஆயிரத்து 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 66 இலட்சத்து 86 ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.