கியூபாவின் புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்றவர் மரணம்
கியூபாவின் புரட்சியாளர்களில் ஒருவரான சேகுவேரா(Ernesto Seguerra)வைக் சுட்டுக்கொன்றவர் உடல்நிலை காரணமாக உயிரிழந்தார்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோ(Fidel Castro)வுடன் இணைந்து கியூபாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற போராடியவர் எர்னெஸ்டோ சேகுவேரா(Ernesto Seguerra).
பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சேகுவேரா(Ernesto Seguerra) இறுதியாக கொரில்லா போரை நடத்தும் பொருட்டு 1967 ஆம் ஆண்டு பொலிவியா நாட்டிற்குள் நுழைந்தார்.
அந்நிலையில் அதே ஆண்டு பொலியாவின் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்த சேகுவேராவை பொலிவிய ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். பின், கைது செய்யப்பட்ட சேகுவேராவை மரியோ டெரன் சலாசர்(Mario Teren Salazar) என்கிற பொலிவிய ராணுவ வீரர் சுட்டுக்கொன்றார்.
இந்த நிகழ்வு முடிந்து 54 ஆண்டுகள் கடந்த நிலையில் மரியோ டெரன்(Mario Teren Salazar)(80) புரோஸ்டேட் புற்றுநோய் காரணமாக நேற்று பொலியாவில் உயிரிழந்தார்.
இதன்படி சேகுவேராவைச் சுட்டுக்கொன்ற பின் அந்த நிகழ்வை டெரன் ‘அது என் வாழ்க்கையின் மிக மோசமான தருணம். அந்த நேரத்தில் நான் 'சே'-வை மிகப்பெரியவராகப் பார்த்தேன்.
அவரது கண்கள் பிரகாசமாக இருந்தது. பதற்றப்படமால் என்னை குறிவைத்துச் சுடு என அவர் சொன்னார். நான் சுட்டேன்’ என விவரித்தது குறிப்பிடத்தக்கது.