வானத்து தேவதைகளின் ஆசியுடன் இடம்பெற்ற திருமணம் ; விமர்சித்துள்ள இணையவாசிகள்
தற்போது இணையத்தில் வைரலாகிவரும் அந்தரத்தில் தொங்கியபடி சொர்க்கத்தில் நடந்த திருமணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வண்ண மலர்கள், விளக்குகளின் அலங்காரத்தினால் முழு மண்டபமே சொர்க்கத்தைப் போல் காட்சி அளித்தது.
பெரிய மரங்கள், செடிகள், கொடிகள் போன்ற அலங்காரங்கள் ஒரு பக்கமும், சிறிய பெரிய விளக்குகள் மறுபக்கமும் நீண்டு வளர்ந்து காணப்படுகின்றன.
இந்த நிகழ்வில் ஆச்சரியம் என்னவென்றால் மேலாக சில பெண்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேவதைகள் போல உடையணிந்து காட்சி அளிக்கின்றனர்.
அவர்கள் மணமக்களுக்கு மலர் தூவி வாழ்த்துவதற்காக அவ்வாறு தொங்கவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோவின் நோக்கமே வானத்து தேவதைகள் ஒன்றுகூடி மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிப்பது என வித்தியாசமான முறையில் கூறியுள்ளார்கள்.
இருப்பினும் இணையவாசிகளோ இதனைப் பார்த்து பதறிவிட்டனர்.
விமர்சித்துள்ள இணையவாசிகள்
அவர்கள் மிகவும் காட்டமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ''பெண்களை இப்படியா அந்தரத்தில் மனிதாபிமானம் இல்லாமல் கட்டி தொங்கவிடுவது?' அவர்களும் மனிதர்கள்தானே? இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஒரு மனிதனை ஒரு காட்சி பொருளாக கருதுவது சரியா? 'என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த இந்த ஏற்பாடு பெண்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்தது போல் உள்ளதாகவும், இதனை செய்தவர்கள் மனநிலை குன்றியவர்களாகதான் இருக்க முடியும் என்றும் இணையவாசிகள் விலாசியுள்ளனர்.
குறித்த செயற்பாட்டை யாரும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.