பிரித்தானியாவில் 1 கோடியை நெருக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 43,676 பேர் பாதிக்கப்பட்டதோடு 149 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 99 இலட்சத்து 74 ஆயிரத்து 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 44 ஆயிரத்து 286 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 9 இலட்சத்து 96ஆயிரத்து 369 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 928 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் 42,873 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 88 இலட்சத்து 34 ஆயிரத்து 188 பேர் குணமடைந்துள்ளனர்.