போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன் பேசுவதே ஒரே வழி!

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sulokshi May 24, 2022 10:27 AM GMT
Report

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுடன் (Vladimir Putin)மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய கூட்டமைப்பு கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. போர் தொடங்கி இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றன.

ரஷ்ய போரில் எண்ணற்ற வீரர்கள் உள்பட, பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் தீவிர போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போரில், குடிமக்களை இலக்காக கொள்ளவில்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்து உள்ளது. உக்ரைனிய ராணுவத்தின் மீது நடத்தப்படும் சிறப்பு நடவடிக்கை என்றே ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன் பேசுவதே ஒரே வழி! | The Only Way To End The War Is To Talk To Putin

இந்நிலையில் டாவோசில் உலக பொருளாதார கூட்டமைப்பில் பார்வையாளர்கள் மத்தியில் வீடியோ இணைப்பு வழியே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) பேசினார். அவர் பேசும்போது, போரின் தொடக்கத்தில் கீவ் நகருக்கு வெளியே ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதியில் நிறைய பேர் கொல்லப்பட்டு இருந்தனர்.

அவர்களின் உடல்களை நாங்கள் மீட்டோம். ஒருபுறம் போர் நடந்து பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் பிற அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவது என்பது ஏற்க முடியாதது. ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) தவிர, ரஷ்ய கூட்டமைப்பு சார்பில் வரும் யாருடனும் எந்த கூட்டத்திலும் பேச நான் தயாராக இல்லை.

அதிலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரம் பற்றி மட்டுமே நான் பேசுவேன். வேறு எந்தவித கூட்டம் நடைபெறுவதற்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறும்போது, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபரே அனைத்து விவகாரங்களையும் முடிவு செய்கிறார்.

அவர் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி நாம் பேசினால், அதில் போரை நிறுத்தும் முடிவை எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். கடந்த வாரம் தொலைக்காட்சியில் பேசிய ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) தூதரக அளவிலான பேச்சுவார்த்தை இன்றி போரை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது என குறிப்பிட்டார்.

இந்த போரானது அதிக அளவில் மனிதர்களை விலையாக கொடுத்துள்ள சூழலை உக்ரைனியர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனிய படைகள் கார்கிவ் நகரருகே வெற்றியை நோக்கி செல்கின்றன. ஆனால், தொன்பாசில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து உள்ளது. எங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்தது. எனினும்,அதில் தீர்வு எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US