திடீரென சுகயீனமடைந்த விமானி; நடுவானில் விமானியாக மாறிய பயணி!
நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் விமானியாக பயணி மாறியசம்பவம் அரங்கேறி உள்ளது.
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள Palm Beach விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட நபர், உடல் நலக் கோளாறால் விமானி தவிப்பதாகவும், என்ன செய்வதென தெரியாமல் தான் விழிப்பதாகவும் கூறியுள்ளார்.
புளோரிடா கடற்பகுதியில் பறந்த ஒற்றை ரக என்ஜின் கொண்ட விமானத்தை, கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளின் அறிவுரையுடன் இயக்கிய நபர் பத்திரமாக தரையிறக்கினார்.
துளியும் முன் அனுபவம் இல்லாத நபர், நிஜ விமானி போல் விமானத்தை தரையிறக்கிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.