24 மணி நேரத்தில் 10 டோஸ் தடுப்பூசி போட்ட நபர்! நியூசிலாந்தில பரபரப்பு சம்பவம்
நியூசிலாந்து ஒருவர் 24 மணி நேரத்தில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் வெளியாகியதை அடுத்து, நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த நபர் ஒரு நாளில் பல தடுப்பூசி மையங்களுக்குச் சென்று நிறைய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். இதற்கு அவர் வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தியும் உள்ளார் என கூறப்படுகின்றது.
இதுகுறித்து DW.com தளத்தில் வெளியான அறிக்கையில், கோவிட் -19 தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு திட்டத்தின் குழு மேலாளர் ஆஸ்ட்ரிட் கோர்னிஃப், 'இது குறித்து அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய“நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். ஏனென்றால் பல தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், உடனே தெரிவிக்கவும். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது”
ஆஸ்ட்ரிட் கோர்னிஃப் மேலும் கூறுகையில், தடுப்பூசி போட யாருடைய பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, உண்மையில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. அவர்களது பெயரில், ஒரு குறிப்பிட்ட நபர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் என்றார்.
இதனை தொடர்ந்து ஆக்லாந்து பல்கலைக்கழக தடுப்பூசி நிபுணர் ஹெலன் பெடோயிஸ்-ஹாரிஸ் இது குறித்து கூறுகையில்,“ இதுபோன்ற ஏராளமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்த தரவுகள் எதுவும் தற்போது இல்லை. அதனால், ஒரு நாளைக்கு 10 டோஸ்களை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என சொல்வது மிகவும் கடினம். ஆனால் அவ்வாறு எடுத்துக் கொள்வது நிச்சயம் பாதுகாப்பானது அல்ல” என்றார்.
மேலும் கொரோனா வைரஸை ஒருவர் இவ்வளவு டோஸ் எடுத்துக்கொண்ட முதல் நபர் இவராக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.