மக்களுக்கு தொடர்ந்து மகிழ்வை ஏற்படுத்தும் தங்கத்தின் விலை!
நீங்கள் நகை வாங்கத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு இன்று நல்ல செய்தி வந்துள்ளது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,660 ஆகக் குறைந்துள்ளது.
நேற்று இதன் விலை 4,670 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் குறைந்து 37,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று 5,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,082 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 40,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 80 ரூபாய் குறைந்து 40,496 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,687 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,691 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,687 ஆகவும், கேரளாவில் ரூ.4,673 ஆகவும், டெல்லியில் ரூ.4,687 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,687 ஆகவும், ஒசூரில் ரூ.4,672 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,673 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 62.50 ரூபாயாக இருந்தது. இன்று அது ரூ.61.70 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 61,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.