கனடாவில் மாணவியை கொலைசெய்த கைதிக்கு நேர்ந்த நிலை
கனடாவில் கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளாக சிறையில் இருந்த கைதி உயிரிழந்துள்ளார்.
இயற்கையான காரணங்களால் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1986ல் மாணவி ஒருவர் எட்ம்ண்டனில் உள்ள ஹொட்டலுக்கு வந்த போது காணாமல் போனார்.
இதன்போது காணாமல் போன அடுத்த இரண்டாவது வாரத்தில் அவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அவருடன் தகாத முறைகள் நடந்து கழுத்தை வயரை கொண்டு நெரித்து கொலை செய்ததாக மணிடோபாவை சேர்ந்த William Roy Tame என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்த நிலையில் பொலிசார் பிடித்தனர்.
இதையடுத்து அதே ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார் William Roy Tame. 1986 அக்டோபர் 10ஆம் திகதி முதல் சிறையில் இருந்த William Roy Tame சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
அவர் இயற்கை காரணங்களால் இறந்துவிட்டதாக Correctional Service of Canada வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.