மீண்டும் வெளிநாடொன்றில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!
ஜப்பானில் ஒரே நாளில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் தொடர்ந்து 2வது நாளாக அங்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேலான பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் தற்போது கொரோனாவின் 7-வது அலையை சந்தித்து வருகிறது. அங்கு வேகமாக பரவும் பி.ஏ 5 ஓமிக்ரோன் வகை கொரோனவால் தொற்று தொடந்து அதிகரித்து வருகிறது.
தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்திற்கு பிறகு டோக்கியோவில் பதிவான அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும். ஒசாகா மற்றும் ஃபுகுயோகா மாகாணங்களும் அதிக எண்ணிக்கையிலான புதிய கொரோனா தொற்று பாதிப்பை பதிவு செய்துள்ளது.
தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிந்த வரை அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சுகாதார மந்திரி ஷிகேயுகி கோட்டோ கூறுகையில்,
இந்த நேரத்தில் எந்த கடுமையான கட்டுப்பாடுகளும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.