ஹோர்முஸ் நீரிணை எமது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் ; ஈரான்அமெரிக்காவிற்கு நேரடி சவால்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்தும் தனது முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் எவ்வித இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கும் இடமில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், போரைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

"தமது தோல்வியை ஒரு ஒப்பந்தம் என மாற்ற அமெரிக்கா முயற்சிக்க வேண்டாம்" என ஈரானின் உயர்மட்ட இராணுவக் கூட்டுத் தலைமையகத்தின் பேச்சாளர் காரசாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவுடன் முரண்பட்டாலும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தீவிர தொடர்புகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த நகர்வுகள் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளதோடு, உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.