ஜெர்மனியில் பொலிஸாருக்கு ஆட்டங்காட்டிய பெண் அதிரடி கைது!
ஜெர்மனியில் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிதி போக்குவரத்து நிறுவனத்தின் பெண் ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
42 வயதான இவர் மில்லியன் கணக்கான டொலர் பணத்தை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வாளர்கள் 42 வயதான நபரை திங்கள்கிழமை மாலை 7.45 மணியளவில் ஸ்டட்கார்ட் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
அதற்கு முன்னர், சந்தேகநபர் தனது சட்டத்தரணி ஊடாக ஆஜராகுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். அந்த பெண் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டார்.
குறித்த பெண்ணால் திருடப்பட்ட பணம் எங்குள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 1.74 மீட்டர் உயரமுள்ள நீல-பச்சை நிற கண்கள், பொன்னிற முடி மற்றும் பச்சை குத்திய பெண்ணை பொலிஸார் பல நாட்களாக தேடி வந்தனர்.
அதன்படி குறித்த பெண்ணுக்கு எதிராக உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் 150 க்கும் மேற்பட்ட மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
ஒரு கட்டத்தில் இந்த பெண்ணை கைது செய்ய முடியாமல் போன நிலையில் அவர் தொடர்பில் வழங்கப்படும் தகவல்களுக்கு தனிப்பட்ட முறையில் 37,500 யூரோக்கள் வெகுமதி அளிக்கப்படும் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரால் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.