கேக் ஒன்றில் தனது சுயவிபரக் கோவையை அனுப்பிய பெண்
நிறுவனமொன்றில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக உண்ணப்படக் கூடிய சுயவிபரக் கோவையை பெண்ணொருவர் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்லி பவ்லினாக் பிளக்பர்ன் எனும் இப்பெண், கேக் ஒன்றில் தனது சுயவிபரக் கோவையை அச்சிட்டு நைக் நிறுவனத்திற்கு அனுப்பிள்ளார்.
இது குறித்த தகவலை கேக்கின் படத்துடன் அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு இணையத்தில் பிரபலமாகி வருகிறது.
குறித்த நிறுவனம் தற்போது ஆட்சேர்ப்பில் ஈடுபடாத போதிலும், தன்னைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் தான் விரும்பியதால் தனது சுய விபர கோவையை அனுப்பி வைத்தாக கார்லி பிளக்பர்ன் தெரிவித்துள்ளார்.