உலகின் மிக அதிக எடை கொண்ட மனிதர் திடீர் மரணம்
உலகின் மிக அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவை சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ சிறுநீரகத் தொற்று காரணமாக காலமானார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, தனது 32-வது வயதில் 600 கிலோ எடையுடன் இருந்தபோது இவர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

கின்னஸ் சாதனை
ஒரு கட்டத்தில் இவரால் படுக்கையை விட்டு நகரக்கூட முடியாத நிலை இருந்தது இவரை இடமாற்றம் செய்யவே எட்டுப் பேர் கொண்ட குழு தேவைப்பட்டது.
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு போன்ற தீவிர உடல்நல பிரச்சனைகளுடன் போராடி வந்த அவர், 2020-இல் கரோனா பாதிப்பிலிருந்தும் மீண்டு சாதனை படைத்தார்.
இருப்பினும், சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான சிறுநீரகத் தொற்று சிகிச்சை பலனின்றி அவரது உயிரைப் பறித்துள்ளது.
உடல் எடையைக் குறைக்க அவர் காட்டிய மனஉறுதி பலருக்கு ஊக்கமளித்த நிலையில், அவரது திடீர் மறைவு மெக்சிகோ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.