உலகின் மிகக் குறைந்த எடை கொண்டு பிறந்த குழந்தை!
உலகின் மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தை என்று நம்பப்படும் குழந்தை சிங்கப்பூர் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளது.
குறைப்பிரசவத்தில் பிறந்தபோது இக்குழந்தையின் எடை 212 கிராம் மட்டுமே என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
24 வாரங்கள் ஆறு நாட்கள் கருவாக இருந்தபோது, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்த இக்குழந்தை ஒரு பெரிய ஆப்பிள் பழத்தின் எடையை கொண்டிருந்தது.
அக்குழந்தைக்கு க்வெக் யூ சுவான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு 245 கிராம் எடையில் அமெரிக்காவில் பிறந்த குழந்தைதான் உலகின் மிகச் சிறிய குழந்தையாக கருதப்பட்டது.
உயிருக்கு போராடி வந்த அக்குழந்தை சிங்கப்பூரிலுள்ள தேசிய பல்கலைக்கழக வைத்தியசாலையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்தது.