அமெரிக்காவில் திறமையான தொழிலாளர்கள் இல்லை; ட்ரம்ப்
அமெரிக்காவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திறமையான தொழிலாளர்கள் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் பிரத்தியேக செய்தி சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை டிரம்ப் கூறியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
H1-B விசாக்கள் அமெரிக்க தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்குமா என செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த ட்ரம்ப், நீங்கள் திறமையான தொழிலாளர்களை கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த செய்தியாளர் இங்கே திறமையான தொழிலாளர்கள் பலர் இருப்பதாக தெரிவித்தார். அதனை மறுத்த ட்ரம்ப் இல்லை, உங்களிடம் சில திறமைகள் இல்லை, மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என பதிலளித்துள்ளார்.
உதாராணமாக ஜார்ஜியாவில் (Georgia) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளை சுட்டிக்காட்டிய அவர், அங்கு தென்கொரிய தொழிலாளர்கள் பேட்டரி உற்பத்திகளை மேற்கொண்டமை தொடர்பில் சுட்டிக்காட்டினார்.
அவ்வளவு சிரமமான தொழிலை முன்னெடுக்கக்கூடியவர்கள் தங்கள் வசம் இல்லை எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.