மின்சார வாகனங்களில் ஒட்டாவா நோக்கிப் பயணிக்கும் முதியவர்கள்!
சுற்றுச்சூழலுக்குப் உகந்த பசுமைக் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, கனடாவில் முதியவர்கள் சிலர் மின்சார வாகனங்களில் நாட்டின் தலைநகரான ஒட்டாவாவை நோக்கிப் பேரணியாகப் பயணித்து வருகின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா நகரில் தொடங்கிய இந்த வாகன அணிவகுப்பு, கடந்த வார இறுதியில் சஸ்காட்செவானில் உள்ள ரெஜினா நகரை வந்தடைந்தது.
'சீனியர்ஸ் கிளைமேட் விட்னஸ்' (Seniors’ Climate Witness) என்ற அமைப்பு இந்த விழிப்புணர்வுப் பேரணியை ஒருங்கிணைத்துள்ளது. இவ்வணிவகுப்பு வரும் வெள்ளிக்கிழமை ஒட்டாவாவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு, அட்லாண்டிக் கனடாவில் இருந்து வரும் மற்றொரு வாகன அணிவகுப்புடன் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கனடிய நாடாளுமன்றத்தின் இலையுதிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி இந்த போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த தேசிய அளவிலான புதிய திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. கொள்கைகளை அறிவிப்பதோடு நிறுத்தாமல், அவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.