கனடாவிலிருந்து கியூபா நோக்கிப் புறப்பட்ட விமானம் இரு முறை திசைமாற்றம்
கனடாவின் கால்கரி நகரிலிருந்து கியூபாவின் வரடேரோ நோக்கிச் சென்ற வெஸ்ட்ஜெட் (WestJet) விமானம் 2390, சனிக்கிழமை இருமுறை திசை மாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் கடுமையான சிரமத்தை எதிர்நோக்க நேரிட்டது.
விமானத்தில் 157 பயணிகள் பயணித்திருந்ததாகவும், முதல் முறையாக திடீர் பராமரிப்பு தேவைக்காக முன்னெச்சரிக்கையாக விமானம் திருப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் இரண்டாவது முறையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த பயணியொருவரை இறக்குவதற்காக மீண்டும் திசை மாற்றம் செய்ததாகவும் வெஸ்ட்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்பின், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல் அறைகள் மற்றும் உணவு வவுச்சர்கள் வழங்கப்பட்டதாகவும், அவர்களை ஞாயிற்றுக்கிழமை காலை புதிய விமானத்தில் வரடேரோவுக்கு பயணம் செய்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு ஏற்பட்ட இச்சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என வெஸ்ட்ஜெட் நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.