உத்தரவை மீறினால் இதுதான் நிலைமை.. தாலிபான்கள் அட்டகாசம்!

Shankar
Report this article
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்களின் அட்டகாசம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனையடுத்து தாலிபான்கள் அந்நாட்டில் பல விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் உள்ளூர்வாசி ஒருவர் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் செய்யும் அட்டகாசம் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஆப்கானிஸ்தானிலுள்ள dehburi என்னும் பகுதியில் தாலிபான்கள் பல சோதனை சாவடிகளை அமைத்துள்ளார்கள்.
அவ்வாறு அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் நிற்கும் தாலிபான்கள் அங்கு வரும் நபர்களில் எவரெல்லாம் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக்கிறார்களோ அவர்களுடைய மொபைல் போனை பறித்துக் கொண்டு சோதனை செய்கிறார்கள்.
அதன்பின்பு அவர்களுடைய மொபைல் போனில் ஏதேனும் இசை இருந்தால் உரிமையாளரை சரமாரியாக தாலிபான்கள் தாக்குகிறார்கள். இவ்வாறு உள்ளூர்வாசி ஒருவர் தாலிபான்களின் அட்டகாசம் குறித்து தெரிவித்துள்ளார்.