டொனால்ட் டிரம்பின் தீர்மானத்தால் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்கும் நிலை
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானம் காரணமாக அமெரிக்காவின் சர்வதேச உதவி நிறுவனங்களில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பணியாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 300 ஆகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில அத்தியாவசிய பணியாளர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. olluஅவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகளவில் அதிக மனிதாபிமான உதவிகளை வழங்கும் நாடாக உள்ள அமெரிக்கா, 60 மேற்பட்ட நாடுகளில் தமது தளங்களைக் கொண்டுள்ளது.
இதேவேளை, யு.எஸ்.எய்ட் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் பலர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை விமர்சித்துள்ளனர்.