அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான கைதிகள் இடமாற்றம்; காரணம் இதுதான்
எலிகளிலிருந்து பரவும் பிளேக் நோயின் காரணமாக அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிறைச்சாலையொன்றிலிருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த சிறைச்சாலை சுத்தம் செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெலிங்டன் சிறைச்சாலையில், 400 க்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் 200 ஊழியர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். குறித்த சிறைச்சாலையில் மின்சார வயர்கள் மற்றும் உட்புற கூரை உள்ளிட்ட உட்கட்டமைப்பில் எலிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 10 வருடங்களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் பிளேக் நோயால் மோசமான பாதிக்கப்பட்டுள்ளதுடன், தென்கிழக்கு மாநிலத்தில் ஒரு தானிய அறுவடை பகுதியில் கொறித்துண்ணிகள் எனப்படும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து பல மாதங்களாக அழிவை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் சிறைச்சாலைகள் 4 மாதங்களுக்கு மூடப்படும். சுத்தம் செய்யப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு எதிர்கால பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கப்படும் என மாநில சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிளேக் நோய் நோய் மாநிலம் முழுவதும் மோசமடைந்துள்ளதால் கடந்த வாரங்களில் தொற்று தீவிரமடைந்துள்ளதுடன் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா மாநிலங்களும் எலிகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் நியூ சவுத் வேல்ஸில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீடுகளில் தொற்றுநோய்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.