பகாமாஸ் செல்லவிருந்த சொகுசுக் கப்பல் மோசமான வானிலையால் கனடா திரும்பியது
நியூஜெர்சியில் இருந்து பகாமாஸ் தீவுகளுக்குச் செல்ல வேண்டிய 'ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்' சொகுசுக் கப்பல், மோசமான வானிலை காரணமாக கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகருக்குத் திருப்பி விடப்பட்டது.
5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிக பணம் செலுத்தி பகாமாஸின் வெப்பமான காலநிலையை அனுபவிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த திடீர் மாற்றத்தால் ஏமாற்றமடைந்தனர்.
பயணக் கப்பல் நிறுவனமான ‘ராயல் கரீபியன்’ பயணிகளின் அதிருப்தியைக் குறைக்க ரொக்கப் பணம் மற்றும் பயண வவுச்சர்களை வழங்கியது. சில பயணிகள் குளிர்கால உடைகளுடன் புதிய இடத்தைச் சுற்றிப்பார்க்கத் தயாராகினர்.

"நாங்கள் கனடாவிலிருந்தே வந்தோம், பகாமாஸ் செல்லவே விரும்பினோம்" என்று சிலர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாலும், பலர் இந்தத் திடீர் மாற்றத்தை நேர்மறையாக ஏற்றுக்கொண்டு ஹாலிஃபாக்ஸ் நகரின் அழகை ரசித்தனர்.
ஹாலிஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட இக்கப்பல், மூன்று நாட்கள் கடற்பயணத்திற்குப் பிறகு மீண்டும் நியூஜெர்சிக்குத் திரும்புகிறது.